Inandoutcinema - Tamil cinema news

திமுகவினர் பேனர் வைத்த விவகாரம் – மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் செல்வாக்கு இருந்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்ற மனநிலை அனைத்து அரசியல்வாதிகளிடமும் பரவிக்கிடக்கிறது. நீதிமன்றம், காவல்துறைகளே கேள்வி கேட்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அரசியல் அட்ராசிட்டிகளை சமீப காலமாக பொதுமக்கள் பார்த்து பார்த்து வெறுப்படைந்து போய் உள்ளனர்.

திமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராக ஆகப்போகிறவர் நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின். இவர் சமீப காலமாக திமுக பொதுக்கூட்டகள் உள்ளிட்ட நிகழ்ச்சிக்களில் கலந்துகொள்கிறார். எல்லாம், இவரை அரசியலில் கொண்டுவரும் முயற்சியாகத்தான் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானகரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக உதயநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி, திமுகவினர் உதய்நிதியை வாழ்த்தி அப்பகுதி முழுவதும் சாலையோரம் ஏராளமாக பேனர்கள் வைத்திருந்தனர்.

பொதுமக்களுக்கு இடையூராகவும், வாழும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தும் இந்த பேனர்கள் வைத்துள்ளதாக அரப்போர் இயக்கம் அதை படம் பிடித்து டிவிட்டரில் வெளியிட்டிருந்தது.

இதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் அரப்போர் இயக்கத்தின் பதிவை ஷேர் செய்து “தவறு, மீண்டும் நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.

அரசியலை சேவையாக செய்து வந்த காலம் மாறி அதை தொழிலாகவும், வியாபார ரீதியிலும் அரசியல்வாதிகள் பார்க்கதொடங்கியுள்ளது நாட்டுக்கு பேராபத்து. அதே போன்று இதை தட்டுக்கேட்கவும் பொதுமக்களும் இதுபோன்ற அமைப்புகளும் தயங்குவது இல்லை. உதயநிதி ஒருபக்கம் தவறுக்கு விளக்கம் தெரிவித்துள் இருந்தாலும் அவர் இளைஞர்களிடம் பெயர் எடுக்க வேண்டும் என்றால் தவறு மீண்டும் நடக்காமல் பாத்துகொள்வதே நல்லது என்பது அனைவரின் கருத்து.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news