சூரரைப் போற்று படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்…

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சிங்கிள் பாடலான எண்ணி ’செய்யோன் சில்லி\ என்ற பாடல் பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

ஏற்கனவே சூர்யா பாடிய ’மாறாதீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய ஹிட்டாகி நிலையில் தற்போது அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது சூர்யாவின் ரசிகர்கள் உள்ளனர் சூர்யா ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ படத்தில் அடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கும் இந்த படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news