சம்பளம் வாங்கிகொண்டு இசை அமைத்துவிட்டு ராயல்டி கேட்பதா? – இளையராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு!

தனது இசையில் உருவான பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கோரி வரும் நிலையில், அந்த ராயல்டி தங்களுக்கே சேரும் என்றும், இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களுன்னான ராயல்டி தொகையில் சுமார் 200 கோடி ரூபாய் ஏமாற்றி வந்துள்ளார் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் சினிமா தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இசை அமைப்பாளர் இளையராஜா மீது சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கள் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசை அமைத்த படங்களின் பாடல்கள் உரிமையும் அதன் மூலம் வரும் வருவாயும் தனக்கே வேண்டும் என்று கோரி வருகிறார். இளையராஜாவை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு அந்த வருவாய் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

இளையராஜா பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு வழங்கினர். அதில் வரும் ராயல்டி 50 சதவிகித பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில், பாடல்களின் மூலம் வரும் வருவாய் 25 லட்சம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களை சாருமே தவிர, சம்பளம் வாங்கி இசை அமையத்த இளையராஜாவுக்கு சேராது. இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய ராயல்டி பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது. கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒலிபரப்புகள் மூலம் வரும் வருவாய்யில் தங்களுக்கு உரிய பங்கு வரவெண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news