ரசிகனின் செல்போனை தட்டிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த சிவகுமார் – காணொளி உள்ளே

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

அவர்களில் ஒருவர் உள்ளே வந்து சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார். உடனே யாரும் எதிர்பாராத வேளையில் சிவக்குமார் அவரது போனை தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த ரசிகர் அங்கு இருக்கும் யாரோ ஒருவரிடம் இதுகுறித்து முறையிட்டார்.

நடிகர் சிவகுமாரின் இந்த செயலுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. ஒரு சில திரை பிரபலங்கள் நடிகர் சிவகுமாருக்கு ஆதரவளித்தாலும் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் சிவகுமார் மதுரையில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டி விட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரபல கலைஞர் இந்த மாதிரி செய்வது தவறுதான். அதற்காக நான் வருத்தம் தெரிவித்துகொள்கிறேன் என நடிகர் சிவகுமார் கூறியுள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news