September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் – சிவகார்த்திகேயன் பிசியோ.. பிசி

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட வரிசையில் அடுத்து சிவகார்த்திகேயன – பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா. இதில், கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். காமடி வேடத்தில் யோகிபாபு, சூரி, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர். இசை டி.இமான். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதுதவிற, சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் கூட்டணியில் உருவாகிவரும் சையின்ஸ் பிக்‌ஷன் படத்தின் சூட்டிங்கும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தின் படபிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் சிவா நடித்து வருகிறார்.

இதில், ராஜேஷ் இயக்கும் SK13 படத்தின் சூட்டிஸ் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வபோது வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், ரவிக்குமார் படத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாம உள்ளது. எனவே விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் – ரவிக்குமார்  SK14 படத்துக்கு ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கறார், நிரவ் ஷா ஒலிப்பதிவு, 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் – ராஜேஷ் SK13 படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். சிவாவின் அம்மாவாக ராதிகா, நண்பனாக சதிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.  ஸ்டுடியோ கீரிஸ் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news