கனா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது பொய் – அருண்ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கும் கனா திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த் என்கிற ராமதாஸ், ரமா, சவரி முத்து, அந்தோணி பாக்யராஜ், பல புதிய நடிகர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையும், தினேஷ் கிருஷ்ணன் பி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணிகளையும், லால்குடி என். இளையராஜா கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். மோகன் ராஜா, ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுதியுள்ளனர். இன்னிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது : சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது தான் உண்மை. சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர்.

என் இயக்குனர் ‘கனா’வை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன், தான் ஒரு தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இந்த கதை கொண்டிருந்தது. அதைப் பற்றி நாங்கள் விவாதிக்கும்போது கூட சிவாவுக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை. உண்மையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, பல பிரபலமான நடிகர்களையும் கூட அவர் யோசித்தார். ஆனால் இறுதியாக அவர் தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருப்பார் என்பதை நான் அவரிடம் எடுத்து சொன்னேன். சிவகார்த்திகேயனை இந்த படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன் என இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news