‘பைக் ஹீரோவகும்’ சிவகார்த்திகேயன் – பிரபல இயக்குனர்

முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது பல படங்கள் நடித்தும், இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடித்து வருகிறாராம். அதற்காக பிரத்யேக பைக் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் எல்லாம் கற்றுக்கொள்கிறார். மேலும் தன் உடலமைப்பையும் கொஞ்சம் மாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றையும் படமாக்கியுள்ளனர்.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்காக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news