September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

சிவகார்த்திகேயன் அடுத்த கதாநாயகி இவர்தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வேலைக்காரன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் சீமராஜா. இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை தொடர்ந்து, எஸ்.எம்.எஸ். பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் சிவகார்த்திகேயனை இயக்குவதாகவும், அதை ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும் தகவல் கசிந்து பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

ராஜேஷின் கடைசி மூன்று படங்களும் தோல்வியை தழுவின. இதனால் வெற்றி பாதைக்கு திரும்ப உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனை பயன்படுத்திக்கொள்ளலாம் என ராஜேஷ் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் ராஜேஷ் ஓகே சொல்லியிருக்கிறார். சில நாட்கள் முன்னர் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்காரன் படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் sk13 படத்தில் நடிக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news