September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

இசை வெளியிட்டு விழாவிற்கு, பிரபல விளையாட்டு வீராங்கனையை அழைத்த சிவகார்த்திகேயன் – விவரம் உள்ளே

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையடுத்து, இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னிலையில் அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவே. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கனா படத்தின் டீசர் மற்றும் இசையை ஆகஸ்ட் 23 – ம் தேதி வெளியிட உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். தற்போது படத்தின் பாடல்களை இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் பிரபலமான வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா வெளியிட இருக்கிறார். இதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news