Inandoutcinema - Tamil cinema news

கலைஞரின் உடல் நலம் விசாரிக்க சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் – புகைப்படம் உள்ள

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர். நடிகர் சிவகுமார், சூரியா, ரஜினி, விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஏற்கனவே வந்து நலம் விசாரித்துசென்றனர்.

இன்னிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிய, தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், சில மணித்துளிகள் முன்னதாக காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவை மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news