September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

அனிருத்தை கழட்டிவிட்டு சிவகார்த்திகேயன் படத்தில் முதல் முறையாக இணைந்த பிரபல இசையமைப்பாளர்

24 AM ஸ்டுடியோஸ் ஆர். டி ராஜாவுடன் மற்றும் இயக்குனர் பொன்ராமுடனும் சிவகார்த்திகேயன் இணையும் மூன்றாவது படம்தான் சீமராஜா ஆகும். சிவகார்த்திகேயன் ஆர்.டீ.ராஜாவுடன் ரெமோ மற்றும் வேலைக்காரன் திரைப்படத்திலும் இயக்குனர் பொன்ராமுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பெரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.எம்.எஸ் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டாவது இணைந்துள்ளார். இந்த படத்தை பற்றிய வேற எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இன்னிலையில் இந்த படத்தில் இசையமைக்க இளம் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவிருக்கிறார்.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சிலமணித்துளிகள் முன்னதாக வெளியாகியுள்ளது. ராஜேஷ் சிவா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திற்கும் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு ஹிப் ஹாப் ஆதியை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news