டெல்டா மாவட்டங்களுக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வழங்கிய பெருந்தொகை. எவ்வளவு தெரியுமா ?

கடந்த 15ம் தேதி கரையை கடந்த கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்கள் சீர்குலைந்து கிடக்கிறது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து, விவசாய பணிகள் பாதிப்படைந்து என டெல்டா மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலுமாக முடங்கியுள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் கைவிரித்த நிலையில் தன்னார்வலர்கள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருமளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர் சிவக்குமாரின் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து இந்த நிதியுதவியை செய்துள்ளனர்.

தமிழக முதலமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு இதனை வழங்காமல், நேரடியாக தன்னார்வலர்கள் மூலம் இந்த நிதியை கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களது இந்த செயலுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களையும், நெற்றியையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைத்துறையினர் பலரும் இதுபோன்று உதவ முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news