September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள். விவரம் உள்ளே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. இந்த படத்தில் ரஜினியுடன் நடித்து வருபவர்கள் பட்டியலியை அதிகாரபூர்வமாக அவ்வப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது.

இன்னிலையில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி – சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு முன்னணி பிரபலங்கள் இணைவதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news