September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

அரசியலில் ஆதரவு ரஜினிக்கா கமலுக்கா ? சிம்புவின் அதிரடி பதில். விவரம் உள்ளே

கலாட்டா தமிழ் இந்த வருடம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கலைஞர்களுக்கு விருது கொடுத்து சிறப்பித்தது. அதில் நடிகர் சிம்பு அவர்களுக்கு யூத் ஐகான் ஆஃப் தி இயர் விருது கொடுக்கப்பட்டது. இதை நடிகர் விக்ரம் வழங்கினார். விருது வாங்கியதும் நடிகர் சிம்பு தனது ரசிகர்களிடம், யார் அறிவுரையுமே கேட்காதீர்கள் அதான் என் அறிவுரை என தெரிவித்தார். தொடர்ந்து, அவர் தங்கை இலக்கியா அண்ணன் குறித்த பல தகவல்களை தெரிவித்தார்.

இந்த வீடியோவை கேட்டதும், தொகுப்பாளர்கள் அவர்களிடம் இலக்கியாவிற்கு என்ன சொல்ல ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு சிம்பு, இலக்கியா தனக்கு தங்கையாக பிறக்க தான் தான் கடவுளிடம் நன்றி சொல்ல வேண்டும் என சற்று கலங்கினார். அப்போது இவரிடம் தற்போதைய அரசியலில் தலைவர் ரஜினிகாந்த் மற்றும் நம்மவர் கமல்ஹாசன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இவர்களில் உங்களின் ஆதரவு யாருக்கு என கேட்டதற்கு சட்டென தமிழனுக்கு என கூற ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது. இந்த செய்தியை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news