September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வெளியான மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் – விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் விஜய் சேதுபதி உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலருடன் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்டிஆர் இணையும் படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில், இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவேற்றி வருகின்றனர்.

பில்லா 3யாக இருக்கலாம் என தகவல் பரவிய நிலையில், வெங்கட் பிரபு அதை முற்றிலுமாக மறுத்தார். இன்னிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி சிம்பு இந்த படத்தில் நெகடிவ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மங்காத்தா அஜித் போல இந்த படத்தில் சிம்பு முற்றிலும் கெட்டவனாக தான் வருவாராம். முற்றிலும் அரசியல் களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news