சிம்புவிற்கு வில்லனாகும் சூர்யா – வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சிம்பு மீண்டும் பிரச்சினை செய்வதாக செய்தி வெளியானது. இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த வாரம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் சிம்பு இன்று(மார்ச் 11) முதல் பங்கேற்றுள்ளார். அவருடன் நடிகர் எஸ்.கே.சூர்யாவும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருக்கிறார். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news