Inandoutcinema - Tamil cinema news

விழா மேடையைவிட்டு ஓடிய நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் காணொளி – காணொளி உள்ளே

காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டை படக்குழுவினர் நேற்று வெகு விமர்சையாக நடத்தி முடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இந்த இசைவெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இன்னிலையில் விழா மேடையில் நடிகர் சிம்பு பேசினார். சில நிமிடம் ரசிகர்கள் கைத்தட்டி சிம்புவை சந்தோஷத்தில் ஆழ்த்தினர். பின்னர் சிம்பு கூறியதாவது : அனைவருக்கும் வணக்கம். யாரும் என்ன தப்பா எடுத்துக்க வேண்டாம். அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

என்னோட ஆசிரியர்கள் மணிரத்னம், ரஹ்மான் மற்றும் வைரமுத்து ஆகிய மூவரும் இங்கதான் இருக்காங்க. நான் ஒண்ணுதான் சொல்ல ஆசைப்படுறேன். சார் நன்றி, அதை தவிர நான் வேறு ஏதும் சொல்ல மாட்டேன் என கூறி மேடையைவிட்டு ஓடிவிட்டார். அந்த காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news