Inandoutcinema - Tamil cinema news

எங்களை பகைச்சுக்காத ஏன்னா நாங்க தமிழர்கள் – சிம்பு ஆவேச பேச்சு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். அங்கு நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆவது நாளாக இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தூத்துக்குடி முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் ஆங்கிலத்தில் பேசியிருப்பார். அதற்க்கு நான் பேசுவது யாருக்கு புரிய வேண்டும் அவர்களுக்கு புரியும் எனவும் எங்களை பகைத்துக்கொள்ளாதே, ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் என ஆவேசமாக பேசியுள்ளார். அந்த காணொளி இதோ………..

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news