ஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்!

சிபிராஜ் முதன்முறையாக ஆக்‌ஷன் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் வால்டர். இதற்கு முன்னர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘சத்யா’ போன்ற போலீஸ் சார்ந்த படங்களில் சிபிராஜ் நடித்திருந்தாலும், போலீஸ் உடுப்பில் கட்டை மீசையோடு ஒரு ஆக்ரோஷமான போலீஸாக சிபிராஜ் நடிக்கும் முழு முதல் போலீஸ் படம் வால்டர். உண்மை சம்பவங்களை தழுவிய கதைகள் இப்போது பரவலாக கவனம் பெற்று வரும் நிலையில் இந்த படமும் குழந்தைகள் கடத்தல் குறித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு  உருவாகியுள்ளது.

 இப்படத்தில் சிபிராஜுடன் சமுத்திரக்கனி, நட்டி மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை அன்பு இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் நல்ல விமர்சனத்தை பெற்றதையடுத்து வருகிற மார்ச் மாதம் வெளியாகவுள்ள வால்டர் படத்தின் ட்ரைலர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது. சின்சியர் போலீஸ் ஆபீஸராக அநியாயத்தை தட்டி கேட்கும் அதிரடி ஆக்ஷனில் சிபிராஜ் நடித்துள்ள இப்படம் நிச்சயம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என ட்ரெய்லரிலே தெரிகிறது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news