ரிலீசுக்கு முன்பே “டாக்சி வாலா” படத்தை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்! – விஜய் தேவரகொண்டா தலையில் இடி

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள “டாக்சிவாலா” படத்தை ரிலீசுக்கு முன்பே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அனைவரது கவணத்தையும் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் “நோட்டா” படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடித்துள்ள “டாக்சி வாலா” படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் இணையத்தளத்தில் புதுப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் டாக்சி வால படம் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழிவினர் பெரும் அதிச்சி அடைந்துள்ளனர். மேலும், ஒரு தகவலும் வெளியிட்டுள்ளனர். அதில், இப்படம் பல மாதங்களுக்கு முன்பே எங்களுக்கு கிடைத்துவிட்டதாகவும் ரிலீசுக்கு பிறகு படத்தை நெட்டில் விட காத்திருந்ததாகவும் ஒரு சில காரணங்களால் படத்தை வெளியிட நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகிற்கு பெரும் தலைவலியாக உள்ள தமிழ்ராக்கர் தற்போது தெலுங்கில் வேலையை காட்டியுள்ளனர். கடந்த திபாவளிக்கு ரிலீஸ் ஆன சர்கார் படத்தை தமிழ்ராக்கர்ஸ் அதே நாளில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news