September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஷிகர் தவான்.

முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து ஆப்கானிஸ்தான் அணிக்குக் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத் தொடந்து முரளி விஜய், ஷிகர் தவான் இருவரும் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்கியுள்ளனர். அராபட்த்தில் இருந்தே அதிரடி காட்டிய ஷிகர் தவான் சதமடித்து அசத்தியுள்ளார். இதில் 19 பௌண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 27 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி 158 ரன்களை எடுத்துள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் 41 ரங்களும், ஷிகர் தவான் 104 ரன்களும் எடுத்துள்ளானர். டெஸ்ட் போட்டியில் உணவு இடைவெளிக்கு முன்னதாக சதமடித்தவர் பட்டியலில் முதல் இந்தியராகவும், உலக அளவில் தவான் 6வது நபராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news