Inandoutcinema - Tamil cinema news

மெர்சல் சாதனையை முறியடிக்க தவறிய ரஜினியின் 2.0 பட டீஸர் – விவரம் உள்ள

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் நேற்று காலை 9 மணியளவில் ரிலீஸ் ஆனது. டீசர் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு டீசர் வெளிவந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த டீசர் வெளிவந்து நான்கு மணி நேரத்தில் தமிழில் 2.6 மில்லியன் பார்வைகளை கடந்தது சாதனை படைத்தது.

அதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ரிலீஸானது தெலுங்கில் 1.8 மில்லியன் பார்வையாளர்களையும், ஹிந்தியில் 1.9 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்தது சாதனை படைத்துள்ளது. இருப்பினும் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.

மெர்சல் திரைப்படம் ஒரே நாளில் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2.0 படத்தின் டீசர் இருபத்திநான்கு மணிநேரத்தில் தமிழில் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை மட்டுமே பெற்றது. இதனால் ரஜினி ரசிகர்களை வருத்தமடைந்துள்ளனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news