புதிய புகைப்படத்தை வெளியிட்டு 2.0 வெளியிட்டு தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.௦. இந்த படத்தில் ரஜினி, அக்ஷய் குமார் ,எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் 3D தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய திரைப்படமாகும். ரோபோவுக்கு, ஏலியனுக்கும் இடையில் நடக்கும் யுத்தமே படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

கடந்தவருடமே வெளியாக வேண்டிய 2.0, கிராபிக்ஸ் நிறுவனங்கள் சிலர் செய்த குளறுபடி காரணமாக படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் அனைத்தும் நிறுவனங்களும் தங்களின் பகுதியை ஒப்படைக்கும் தேதியை தந்துவிட்டனர். எனவே ரஜினி நடிக்கும் 2.0 படம், நவமபர் 29ம் தேதி வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news