ஆர்யா நடிக்கும் அரண்மனை-3ல் பிக்பாஸ் பிரபலம்?

வந்தா ராஜாவாதான் வருவேன் மற்றும் ஆக்‌ஷன் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால் மீண்டும் தன்னுடைய பலமான காமெடி பாணியில் படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. அதுவும் ஏற்கனவே வெற்றியடைந்த அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கிறார். இந்த படத்திற்கான் முதற்கட்ட பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். 
 

sakshi

இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க இருப்பதாக முன்னரே தகவல் வெளியானது. இதுவரை வெளியான அரண்மனை ஒன்று மற்றும் இரண்டில் மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் யார் அந்த மூன்றாவது ஹீரோயின் என்பது பலருக்கும் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் 3ல் பங்கேற்ற சாக்‌ஷி அகர்வால் அரண்மனை 3 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரண்மனை 2-வில் இசையமைத்த ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்காமல் முதல் பாகத்திற்கு இசையமைத்த சி.சத்யாதான் இசையமைக்கிறார். வருகிற 20ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் குஜராத்திலுள்ள ராஜ்கோட்டில் தொடங்க இருக்கிறது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news