சீதக்காதி படத்தின் பெயர் மாறுகிறதா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சீதக்காதி. படத்திற்கு எதிர்ப்பு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் ரிலீஸில் பாதிப்பு இருக்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

சீதக்காதி என்கிற பெயர் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த அப்துல் காதர் ஐயாவை குறிக்கிறது. அவரின் பெயரிடப்பட்டுள்ள விஜய் சேதுபதியின் படத்தில் அவரை பற்றிய தவறான பதிவுகள் எதுவும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் எனவும், அப்படி இடம் பெற்றால் படக்குழுவினர் சட்டரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவும் இந்திய தேசிய லீக் கட்சியினர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருபவர் விஜய் சேதுபதி. சீதக்காதி அய்யா  பெயர் கொண்ட படத்தில் எந்த தவறும் இருக்காது என்பது நம் அனைவரின் நம்பிக்கை.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news