சின்னத்திரை நடிகர் கைது – மனைவி பரபரப்பு புகார்…

பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். கல்யாணப் பரிசு, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், தற்போது ‛தேவதையை கண்டேன்’ தொடரில் நடித்து வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். சில தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஈஸ்வர் தன்னுடன் நடித்து வரும் ஒரு நடிகையுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனை மனைவி ஜெயஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜெயஸ்ரீ தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும், அவரது தாயாரையும் கைது செய்தனர். பின்னர் தாயார் ஜாமீனில் விடப்பட்டார்.

இதுகுறித்து ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கூறியிருப்பதாவது: எங்களுக்கு கல்யாணமாகி 4 ஆண்டுகளாகிறது. அவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது திருமணத்துக்கு முன்பே தெரியும். ஆனால் அவர் சூதாட்ட பிரியர் என்பதும், அதன் காரணமாக லட்சக்கணக்கில் அவருக்கு கடன் இருப்பதும் திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். அந்த கடன்களையும் நான் தான் அடைத்து வருகிறேன்.

தேவதையைக் கண்டேன் தொடரில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான் உடன் நடிக்கும் நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டது. அந்த நடிகைக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் நான் இதை கண்டித்தேன். ஆனால் அவர் விவாகரத்து கேட்டு குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அவரின் கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் போலீசில் புகார் கொடுத்தேன். என்கிறார் ஜெயஸ்ரீ

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news