Inandoutcinema - Tamil cinema news

“செம” ஆர்த்தனா பினு எதுக்கு ஆசை படுறார் தெரியுமா?

சென்னை: 2016ல் ‘‘சீதம்மா ஆண்டலு ராமய்யா சிற்றலு’’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி, தமிழில் தொண்டன் படத்தில் சிறு வேடத்தில் நடித்து, இப்போது ‘‘செம’’ படத்தில், கிராமத்து பெண்ணாக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஆர்த்தனா பினு..

செம படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஆர்த்தனா பினு கூறுகையில்:
ஜிவி.பிரகாஷ் உடன் நடிக்கும் போது ஒரு சக நடிகையாக அல்லாமல், ஒரு ரசிகையாக அந்த தருணத்தை உணர்ந்தேன். அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். பின்னணி இசையில் அவர் ஒரு மாஸ்டர், நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள்.

வள்ளிகாந்த் கதை சொன்ன விதமும், மகிழினி கதாபாத்திரமும் என்னை மிகவும் கவர்ந்தது. மகிழினி அவள் பெயருக்கேற்றார்போல உண்மையானவள், நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குனர் வள்ளிகாந்துக்கு நன்றி.

அடுத்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், விக்ராந்த்தின் வெண்ணிலா கபடி குழு படங்களில் கிராமத்து பெண்ணகவே நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நகரத்து பெண் கதாபாத்திரங்களிலும் நடிப்பேன்” என்றார் அர்த்தனா.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news