சீதக்காதி விமர்சனம் – A center Hit

நடிகர் விஜய் சேதுபதியின் 25-வது படம் சீதக்காதி. நாடக நடிகர் சீதக்காதி தன் வாழ்க்கையை நடிப்பிற்காக அற்பணிக்கிறார். அவர் நடிக்கும் பொழுதே இறந்துவிடுகிறார். ஆனால் அவரது ஆன்மா நடிப்பின் மீது கொண்ட ஈர்ப்பால் நாடக நடிகரான ராஜ்குமார் மீது இறங்குகிறது. பின்னர் ராஜ்குமார் சினிமாவில் நடிக்க செல்கிறார். அவர் பேரும் புகழும் அடையும் சமயத்தில் சீதக்காதியின் ஆன்மா அவரைவிட்டு பிரிகிறது. அதனால் ராஜ்குமாருக்கு என்ன ஆகிறது. விஜய்சேதுபதியின் ஆன்மா அடுத்து என்ன செய்கிறது என்பதுதான் மீதிக்கதை.

விஜய்சேதுபதி சீதக்காதி கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். அவருடைய வயதான முதியவர் தோற்றம் கணிர் குரல் என்று ரசிகர்களிடம் கைதட்டலை பெறுகிறார். ஆனால் படத்தில் அவர் 15 நிமிடமே வருகிறார் என்பது ரசிகர்களை ஏமாற்றுகிறது. விஜய் சேதுபதி இதில் கெளரவ தோற்றம் என்பதை படம் பார்த்த ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ராஜ்குமார். மீண்டும் நடிப்பில் கலக்கி இருக்கிறார். விஜய் சேதுபதி ஆன்மா அவரது உடலில் இருக்கும் பொழுது, இல்லாத பொழுது என கதாபாத்திரத்தில் வேறுபாடு காட்டி நம்மை மகிழ்விக்கிறார்.

படத்தின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் சுனில். அவரை அந்த கேரக்டரில் தேர்ந்தெடுத்த பெருமை இயக்குநரையே சேரும். அவரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

அர்ச்சனா, கருணாகரன், பார்வதிநாயர், ரம்யா நம்பீசன் என படத்தில் உள்ள கேரக்டர்கள் எதுவும் மனதில் தங்கவில்லை. மவுலி மட்டும் படம் முழுவதும் வந்து அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் படத்திற்கு பிறகு. இயக்குநராக தமிழ் சினிமாவில் தன்னை நிலைநாட்டி இருக்கிறார். நாடக கலைஞர்களின் வாழ்க்கை, நாடகங்கள் எப்படி அந்த காலத்தில் இருந்தது என நாடக உலகத்தை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார். ஆனால் நகைச்சுவை காட்சிகள் கூட நீளமாக இருப்பதால் நம்மை சற்று நெளிய வைக்கிறது.

சரஸ்காந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெருமை. 96 படத்தின் இசைஅமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். அவரின் இசை நம்மை மீண்டும் ஆட்கொள்கிறது.

படத்தின் அனைத்தும் நம்மை ரசிக்கும் படி இருந்தாலும் படம் ஏனோ நம்மை மழுதாக கவரவில்லை. காரணம் விஜய் சேதுபதி கெளரவ தோற்றம் என சொல்லாதது. திரைக்கதை மெதுவாக நகர்வது. எனக்கு இந்த மாதிரி படங்கள் பிடிக்கும் என சொல்லும் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக ஏமாற்றம் அளிக்காது.

சீதக்காதி: first bench student only 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news