September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

புதுக்கோட்டை ரசிகர்களால் சர்ச்சையில் சிக்கிய சீமராஜா திரைப்படம் – விவரம் உள்ளே

24 AM ஸ்டுடியோஸ் ஆர். டி ராஜாவுடன் மற்றும் இயக்குனர் பொன்ராமுடனும் சிவகார்த்திகேயன் இணையும் மூன்றாவது படம்தான் சீமராஜா ஆகும். சிவகார்த்திகேயன் ஆர்.டீ.ராஜாவுடன் ரெமோ மற்றும் வேலைக்காரன் திரைப்படத்திலும் இயக்குனர் பொன்ராமுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பெரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மதுரையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்கு மாஸ் வரவேற்பை கொடுத்தனர்.

மதுரை முழுக்க தோரணங்கள், சுவரொட்டிகள், மற்றும் சிவகார்த்திகேயன் புகைப்படங்களுமாக இருந்தது. மதுரையே திருவிழா கோலம் காட்சியளித்தது. இதனை ஒருபுறம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடினாலும், ஆர்வக்கோளாறான சில ரசிகர்களின் செயல்பாடால் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது சீமராஜா திரைப்படம்.

புதுக்கோட்டை நகராட்சி சுவர்களில் வரையப்பட்டு இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்களை அளித்துவிட்டு சீமராஜா படத்தின் ஓவியங்களை அவரது ரசிகர்கள் வரைந்துள்ளனர். இதற்க்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு சிலரால் மத்த ரசிகர்களுக்கும் அவப்பெயரை உண்டாக்குவதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news