Inandoutcinema - Tamil cinema news

இங்கிலாந்த் கிரிக்கெட் அணியை அதிரவைத்த ஸ்காட்லாந்து வீரர்கள்.

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி வியப்புக்குரிய வகையில் ஆடி இங்கிலாந்த் வீரர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. ஆரம்பத்தில் அமர்களப்படுத்தி, அதிரடியாக ரன் மழை பொழிந்த அந்த அணியினர், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தனர். ஸ்கேட்லாந்த் ஒரு நாள் போட்டி வரலாற்றில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் அதிகபட்சமாக மெக்லியோட் 140 ரன்கள் விளாசி கடைசிவரை களத்தில் இருந்தார். அதில் 16 பௌண்டரிங்க்ளும், 3 சிக்சர்களும் அடங்கும். அடுத்து மாபெரும் இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. ஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந் தோற்பது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 105 ரன்கள் எடுத்தார். கிரிக்ட்டில் சிறிய அணியாக உள்ள ஸ்கேட்லாந் அணியிடம் இங்கிலாந்த் தோல்வியுற்றதால், இங்கிலாந்த் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். மேலும் சமூக வலைதளத்தில் இங்கிலாந்த் வீரர்களை விமர்சித்தும் வருகின்றனர். அபாரமாக விளையாடிய ஸ்கேட்லாந் வீரர்களை கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news