அப்பா வழியில் மகள் – கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார் திவ்யா சத்யராஜ்?

சென்னை: நடிகர் சதியராஜின் மகள் திவ்யா. இவர் சென்னையில் கடந்த 6 வருடமாக ஊட்டச்சத்து மருத்துவம் பயின்று வருகிறார். மேலும் அதே துறையில் ஏராளமான ஆராயிச்சிகள் மேற்கொண்டுள்ளார். மேலம், “அக்‌ஷய பாத்திரா” என்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டம் அமைப்பின் விளம்பர தூதுவராகவும் உள்ளார். இவர் தென்னிந்தியாவின் முதல் ஊட்டச்சத்து நிபுணராகவும், இந்திய அளவில் 3ம் இடத்திலும் உள்ளார்.

சமீபத்தில் திவ்யா சத்யராஜ் இந்தியாவில் மருத்துவத்துறையில் நடைபெறும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மத்திய உணவு தரத்தை மேம்படுத்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் விஜயபாஸ்கரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவ் வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யா சத்யராஜ் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அது வெரும் வதந்தி என்று அவர் விளக்கம் அளிந்திருந்தார்.

இதற்கிடையில், தீவிர கம்யூனிச கொள்கை பற்றுகொண்ட திவ்யா, சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திவியா சதியராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  நான் மனதால் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸத்தில் அனைத்து சமமாக பார்க்கப்படுகிறது. எனக்கு நல்லக்கண்ணு அய்யாவை பற்றி நன்றாக தெரியும். ஒரு அரசியல் வாதி எப்படி வாழவேண்டும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். தான் கொண்ட சாதியற்ற சமூகம் கொள்கைக்காக  எவ்வளவோ தியாகங்களை செய்துள்ளார். தற்போது நான் தமிழகத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை “அக்‌ஷய பாத்திரா” மூலம் செய்து வருகிறேன்’ இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த பேட்டியில் அவர் கம்யூனிஸம் பற்றியும் தலைவர் நல்லக்கண்ணுவை பற்றி பேசியுள்ளதால், திவ்யா சத்யராஜ் விரைவில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news