மிரட்டலாக வெளிவந்த சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே

நடிகர் சத்யராஜ் நடிப்பில் தீரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு தீர்ப்புகள் விற்கப்படும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பை தமிழ் தேசியவாதி திருமுருகன் காந்தி வெளியிட்டார்.

அவர் தலைப்பு வெளியிட்ட பொது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தீர்ப்புகள் விற்கப்படும் என்ற புதிய படத்தில் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது பற்றி இயக்குனர் தீரன் கூறியதாவது : தீர்ப்புகள் விற்கப்படும் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தை வழங்கும் எங்கள் நோக்கம் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மூலம் தெரிய வரும். இந்த படம் முழுக்க ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என இயக்குனர் தீரன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news