வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சசிகலாவை ஆஜர்படுத்த உத்தரவு

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 28-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கிய வகையில் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 1996-ஆம் ஆண்டு சசிகலா, பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாஸ்கரன் நேரில் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவை படிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, தற்போதைய நிலையில் சசிகலாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லை என்றும், மே 28-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news