சர்வம் தாளமயம் – விமர்சனம்

தளபதி ரசிகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் குமார். மிருதங்க சக்கரவர்தியான நெடுமுடி வேணுவின் இசை மீது அவருக்கு வரும் காதல்; அவரையும் கர்நாடக சங்கீதத்தில் நம்பர் 1 ஆக வேண்டும் என தூண்டுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா, அதை அடைய அவருக்கு ஏற்படும் தடைகள் என்ன, இறுதியில் வெற்றி பெற்றாறா? இல்லையா என்பது கதை.

ஒரு இசை மீது ஆர்வம் கொண்ட கலைஞனின் கதை. இசை மீது அவருக்கு உள்ள ஆர்வம், அதை கற்று கொள்ள அவர் படும் ஏக்கம். அதற்கு தடையாக இருக்கும் அவரது பிறப்பு, அவருக்கு சப்போர்ட் செய்யும் அவரது நண்பர்கள். அவரை ஊக்குவிக்கும் குரு. அவருக்கு ஏற்படும் தடைகள் என ஒரு கலைஞனின் வாழக்கையை அழகாக காண்பித்து இருக்கின்றனர்.

கார்நாடக இசையை கற்று கொள்ள தராதரம் வேண்டும் என்ற மூட சிந்தனையை உடைத்து காட்டியிருப்பது பாரட்டுதலுக்குறியது. இசை என்பது எல்லாருக்கும் சமம், அது அவரவர் வாழ்க்கையின் அனுபவத்திற்கு ஏற்ப வடிவமாகிறது. அது ஒரு அருவி அதற்கு அணை போட முடியாது என்று கதையின் கருவை அழகாகவும் காண்பித்து இருக்கிறார்கள்

பீட்டராக வரும் ஜி.வி.பிரகாஷ். த்ரிஷா இல்ல நயந்தாரா படத்தில் பார்த்ததுக்கும் இதற்கும் பெரிய நடிப்பு வித்தியாசம் இல்லை. ஆனால் முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நெடுமுடி வேணு படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிர் கொடுத்து இருக்கிறார். அவரை போலவே தங்களுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கதைக்கு வலு சேர்திருக்கிரார்கள் குமரவேல் மற்றும் ஜி.வி.பிரகாஷின் அம்மாவாக வரும் அதிரா.

படத்தில் நாயகி அபர்ணா பால முரளிக்கு பெரிதாக வேலை இல்லை. ஆனால் அவருக்கு கொடுத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். வினித் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் அவர் கதாபாத்திரத்தில் வலுவில்லை. தொகுப்பாளினியாக வரும் டிடி. அவர் அவராகவே வருவதால் நமக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் இதுதான் டிவியில் நடக்கும் பாலிடிக்ஸ் என்பதை உறுதி செய்திருக்கிறார்.

இயக்குநர் ராஜீவ் மேனன். இந்த மாதிரி மியூஸிக் சம்மந்தமான கதைகளை தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால் அதற்கு உண்டான உழைப்பு அதிகம். அதை சரியாக செய்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள். கதையின் கருவை சரியாக சொன்ன அவர், திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். அப்படி தோன்றுவதற்கு காரணம் கதையின் போக்கு.

தளபதி ரசிகன். காதலன், இசையின் மீது காதல், நெடுமுடி வேணுவின் வைராக்கியம், வினித்தின் பிரச்சனை, டிவி தொகுப்பாளினியின் பிரச்சனை, மீண்டும் கதாநயகனின் காதல், இசை மீது காதல், வினித் பிரச்சனை, டிவி தொகுப்பாளினி பிரச்சனை என தனி தனியாக இருப்பது கொஞ்சம் சுற்றுகிறது.

படத்தின் இன்னொரு கதாநாயகன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். யானைக்கு ஏற்ற தீணி என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு இசைஅமைப்பாளருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கும். நம் முழு திறமை ஒரு படத்தில் வெளிவர வேண்டும் என்று அந்த ஏக்கம் அவருக்கு இதன் மூலம் தீர்ந்து விட்டது என கூறலாம்.

படத்தில் மற்ற டெக்னிஷ்யன்களும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இசை மீது பற்று கொண்டவர்களுக்கு இந்த படம் ஒரு இசை விருந்து.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news