சர்க்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி பாடல் செய்த சாதனை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான்.

துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான சர்க்கார் படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி [நாளை] சென்னையில் நடைபெற உள்ளது. கடந்த 24-ம் தேதியன்று சிம்டாங்காரன் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஒருவிரல் புரட்சி என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார். போராட்ட பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் படத்தின் கொண்டாட்டமாக இந்தப் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடல் காணொளி தற்போது வரை ட்ரெண்டிங்கில் 2ம் இடத்தில் வளம் வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news