September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்கார் படத்தில் இவரது கதாபாத்திரம் இதுதான். சர்கார் லேட்டஸ்ட் அப்டேட்

விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறது படக்குழு. மேலும் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பதால், வரலட்சுமி இன்னொரு கதாநாயகியா? என்ற சந்தேகமும் எழுந்தது. தற்போது சர்காரில் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி ஒரு அரசியல்வாதியின் மகளாக நடித்திருக்கிறாராம். அதும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அவர் கதாப்பாத்திரம் நெகடிவாக இருக்கலாம் என்றும் திரைவட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news