சர்க்கார் படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு -விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்னிலையில் நடிகர் விஜயின் சர்க்கார் படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. விடுமுறை நாட்கள் நிறைய இருப்பதால் நவம்பர் 2-ம் தேதியே சர்க்கார் படம் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், நவம்பர் 6-ம் தேதி படம் ரிலீஸ் என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சர்கார் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அதாவது, 18 வயதுக்கு கீழுள்ளவர்கள், தங்கள் பெற்றோரின் துணையுடன் மட்டுமே சர்கார் படத்தைப் பார்க்க முடியும்.

அத்துடன், டிவியில் இந்தப் படத்தை ஒளிபரப்ப வேண்டுமென்றால், மறுமுறை தணிக்கை செய்து யு சான்றிதழ் பெற்ற பிறகே ஒளிபரப்ப முடியும் என தணிக்கை குழுவினர் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று மெர்சல் படம் ரிலீஸானது. சர்கார் படமும் தீபாவளியன்றே வெளியாவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news