Inandoutcinema - Tamil cinema news

சர்கார் படம் நெட்டில் கசிய அதிக வாய்ப்புள்ளது! – ஏன்னா…

சென்னை: விஜய் நடிப்பில் சர்கார் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படம் ஒரு நாளுக்கு முன்பே அமேரிக்காவில் பிரிமியர் ஷோக்கள் திரையிடப்படுவதால் இப்படம் திருட்டுத்தனமாக நெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் படம் நாளை பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை வெற்றிப்படமாக்கும் முனைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனைத்து புரோமோஷன் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தை பார்க்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருப்பது போல காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சர்கார் படம் தீபாவளி நாளான நவ.6ம் தேதி அன்று உலகம் முழுவதும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென அமேரிகாவில் மட்டும் சர்கார் படம் ஒரு நாளுக்கு முன்பாகவே அதாவது இன்று சில தியேட்டர்களில் பிரிமியர் ஷோ திரையிடப்பட உள்ளது. இப்படத்தை அமேரிகாவில் நர்மதா மீடியா மற்றும் கோலிவுட் மூவிஸ் USA ஆகிய நிறுவனங்கள் ரிலீஸ் செய்கின்றன.

இதனால், சர்கார் படத்தை தியேட்டரில் திருட்டுத்தனமாக எடுத்து நெட்டில் விட அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. சர்கார் படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3 ஆயிரத்து 400 ஸ்கிரீன்களில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. இப்படம் அமேரிகாவில் மட்டும் 200 ஸ்கீரின்களில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news