வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில், தமிழகத்தில் ஆளும் கட்சியை தவறாக விமர்சிப்பது போன்று சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் பெரும் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களை கிழித்தனர். மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை போலீசார் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றதாக புரளி கிளமி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து படத்தில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 வழக்குகள் பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news