Inandoutcinema - Tamil cinema news

அடேங்கப்பா..! சர்கார் படத்துக்காக கேரளாவில் இதெல்லாம் பன்றாங்களா?

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே விஜய் – ஏர்.ஆர்.முருகதாசின் சர்கார் படம்  வரும் திபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இதனையொட்டி, தளபதி விஜய் ரசிகர்கள் சர்கார் பட புரோமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், தமிழகத்தை காட்டிலும் கேரளாவில் விஜய் ரசிகர்கள் சர்கார் ரிலீசை கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவில் விஜக்கு 175 அடி கட்-அவுட்!

கேரள மாநிலம், கொல்லத்தில் 175 அடி உயரத்தில் தளபதி விஜய்க்கு கட் ஆவுட் அமைத்துள்ளனர். இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் ஒரு நடிகருக்கு அமைக்கப்பட்ட உயரமான கட்-அவுட் என்று கூறப்படுகிறது.

கொல்லம் நண்பன்ஸ் என்ற விஜய் ரசிகர் மன்றத்தினர் இந்த கட்-அவுட்டை அமைத்துள்ளனர். இதனை காண ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் நேற்று அப்பகுதியில் கூடினர். இது டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

தெருவுக்கு தெரு சர்கார் கொண்டாட்டம்…

கேரளா முழுவதும் தெருவுக்கு தெரு விஜய் ரசிகர்கள் சர்கார் ரிலீசை கொண்டாடி வருகின்ற்னர். கோட்டையம் மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கனச்சேரி என்ற பகுதி விஜய் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு ஒரு கட் அவுட் அமைத்துள்ளனர்.

இதேபோன்று, கொல்லம் மாவட்டத்தில், கோட்டக்காரா என்ற பகுதியில் உள்ள காது காதுகேளாதோர் – வாய் பேச முடியாதோர் பள்ளியில் அப்பகுதி விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொணடாடியதோடு பள்ளுக்கு நலதிட்ட உதவிகளையும் செய்துள்ளனர்.

சிறு தியேட்டர்களில் கூட..

ஆலபுழா மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் என்ற சிறிய கிராமத்தில் உள்ள தியேட்டரில் கூட சர்கார் படத்திற்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

சர்கார் பேன்ஸ் ஷோ…

கேரளாவில், திருவனந்தபுரத்தில் சர்கார் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன் பேன்ஸ் ஷோ-க்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கி வைத்தார்.

அடேங்கப்பா..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.

தளபதிவி விஜயின் சர்காரை படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள மேரிலேண்ட் திரையரங்கில் தொடர்ந்து 24 மணி நேரம், 8 ஷோக்கள் சர்கார் படத்தை திரையிட உள்ளனர். இதுவரை இதுபோன்று வேறு எந்த படத்துக்கு செய்து இல்லை என்று கூறப்படுகிறது.

இறுதியாக தமிழகத்தை மிஞ்சிய கேரள ரசிகர்கள்!

கேரள விஜய் ரசிகர் இந்த டிவிட்டை பகிர்ந்துள்ளார். அதில் வயநாட் சப்-கலெக்டர் இவ்வாராக தெரிவித்துள்ளார். ‘வயநாட்டில் உள்ள பல மலையாள குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் தமிழ் புறியாது. கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும். ஆது அவர்களுக்கு பிரச்னையே கிடையாது. ஸ்கிரினில் விஜயை பார்ப்பதே அவர்களுக்கு போதும். நான் அவர்களுடன் உரையாற்ற செல்லும்போது எல்லாம் நான் விஜயுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை காட்டி தான் அவர்களை கணவத்தை ஈர்ப்பேன்.

தமிழகத்தை விட கேரளாவில் விஜயை பெரிதாக பார்க்கின்றனர். தமிழகத்தில் விஜய்க்கு சில எதிர்பாளர்கள் உள்ளனர். ஆனால், கேரளாவில் விஜய் மீது அன்பு மட்டுமே உள்ளது. வெறும் அன்பு!. இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.

பாத்திங்களா ரசிகர்களே இங்க நம்ம விஜய் பெரியவரா, அஜித் பெரியவரா என்று சண்டையிட்டுகொண்டிருக்கிரோம். ஆனால், நாம் செய்ய வேண்டிய நல்ல விஷியங்களை நமது அண்டை மாநில ரசிகர்கள், நம்மை விட சிறப்பாக செய்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news