“சர்க்கார்” முதல் சிங்கில் அறிவிப்பு – 5 நிமிடத்தில் இந்திய அளவில் டிரெண்டானது

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான்.

துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும்  சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து விட்டு விஜய் ரசிகர்கள் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கொண்டாடி தீர்த்துவிட்டனர். இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியிடபோவதாக நேற்று சன்பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இதனால், தளபதி ரசிகர்கள் அந்த அறிவிப்புக்காக ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் சற்று முன்பு படத்தின் ‘முதல் பாடல் (சிங்கில்) வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் அதிகாரப்பூவரமாக  அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், #SarkarSingleOn24th #SarkaKondattam என்று ஹாஷ் போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.  ஏ.ஆர்.ரஹமான் இசையில் வெளிவர இருக்கும் சர்கார் படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news