Inandoutcinema - Tamil cinema news

விராட் கோலி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது – சர்ப்ராஸ் அகமது

துபாய் மற்றும் அபுதாபியில் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இலங்கை அணி 2 தோல்விகளை சந்தித்து இந்த தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இன்று இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங் அணியை சந்திக்கிறது. அடுத்த ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது சற்று பின்னடைவாக இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியிருப்பதாவது : விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விராட் கோலி இந்திய அணியில் இல்லாவிட்டாலும், அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன். இந்திய அணியின் பேட்டிங் மிக வலுவானது. எனவே, இந்தப்போட்டி சவாலானதாக இருக்கும் என என்னால் உறுதியாக கூற முடியும் என கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news