September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

மக்கள் போராட உரிமை இல்லை என கூறுகிறாரா ரஜினி ? ஆவேச கேள்வி எழுப்பிய சரத்குமார்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். பத்திற்கும் மேற்பட்ட பொது மக்களின் உயிரிழப்பும் நடைபெற்றது. அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 உயிர்கள் பறிக்கப்பட்டன. மேலும், பலர் பலத்த காயமடைந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதியுதவியும் வழங்கினார். கூடவே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததாலே கலவரமாக மாறியது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல, ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர் என கூறினார்.

இவரின் இந்தக் கருத்துக்கு தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சமூக ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ரஜினிக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகம் போராட்டக்களமாக மாறி சுடுகாடாக மாறிவிடும் என்கிறார். அப்படியென்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று கூறுகிறாரா. மக்கள் போராட உரிமை இல்லை என ரஜினி கூறுகிறாரா? மக்களுக்குப் போராட உரிமை இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தில் பேச்சுரிமை, போராட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரச்னையைச் சரிசெய்வதை விட்டுவிட்டு மக்களைக் கட்டுப்படுத்த முயலக் கூடாது. ரஜினியின் பேச்சு, மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அவர்மீது உடனடியாக தேசத் துரோக வழக்கு பதிய வேண்டும் என் ஆவேசமாக கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news