Inandoutcinema - Tamil cinema news

400 கோடி பொருட்செலவில் உருவாகும் சங்கமித்ரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை திஷா பதானி, ஜெயம்’ ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் நடிப்பில் உருவவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்தான் சங்கமித்ரா. இந்த படத்தின் கதை 8ம் நூற்றாண்டில் நடப்பது போல் அமைக்கப்பட்டது.

படத்தை மிகபிரமாண்டமாக ரூ.400 கோடி செலவில் ஸ்ரீதேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங்கை வரும் ஆகஸ்டில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கசிந்ள்ளது. தற்போது ஜெயம் ரவி அடங்கமறு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், அதை முடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

அதேநேரம், திஷா பதானி மற்றும் ஆர்யா உள்ளிட்டோரிடம் வரும் ஆகஸ்ட் மாதம் சங்கமித்ரா படப்பிடிப்பிற்காக தேதிகள் ஒதுக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் கூறப்படுகிறது. இதனால், ஷூட்டிங் ஆகஸ்டில் தொடங்குவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் நெருக்கிய திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news