September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

10 லட்சம் பார்வையாளர்களை கடந்த “யூ-டர்ன்” படத்தின் முன்னோட்ட காணொலி

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு கண்ணடத்தில் பவண்குமார் இயக்கத்தில் வெளிவந்த திகில் படம் ‘யூ-டர்ன்”. விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரதா ஸ்ரீநாத் இந்த படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். மிகப்பெரிய  அளவில் வெற்றி பெற்ற இப்படம் தற்போது, தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகி வருகிறது.

“யூ-டர்ன்” தமிழ், தெலுங்கு வர்ஷன் படத்தில் ஸ்ராதா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பூமிகா,  ஆதி, ராஹுல் ரவிந்தரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் நேற்று மதியம் 12.45 மணிக்கு “யூ-டியுபில்” ரிலீஸ் ஆனது. இதில், நகரில் அடிக்கடி கொலை நடக்கும் ஒரு பகுதியில் ஏன் அந்த கொலை நடக்கிறது. கொலைகளுக்கு காரணம் சமந்தா தான் என்கிற ரீதியில் காட்சிகள் செல்கிறது.

இந்நிலையில், இந்த டிரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது. தமிழில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வி.ஒய்.கம்பைன்ஸ் மற்றும் சில்வர் ஸ்கிரின் சார்பில் சினிவாசா தயாரிக்கிறார்.

 

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news