Inandoutcinema - Tamil cinema news

சர்ச்சைக்குரிய சேலம் – சென்னை பசுமைவழி சாலையை பற்றி திரைப்படம் – டிரைலர் வெளியிட்டதால் பரபரப்பு

சென்னை: மத்திய அரசின் திட்டத்தில் மூலம் சேலம் முதல் சென்னை வரை 8வழி விரைவு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலை அமையும் பாதையில் உள்ள விவசாயநிலங்கள், வீடுகள், வன பகுதிகள், மலைகள் அழிக்கப்படும் என்பதால், இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரும் சர்ச்சைகளுக்கிடையே சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய – மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை மையமாககொண்டு ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை, சத்வா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நிருமா தயாரிக்கிறார். சந்தோஷ் கோபால் என்பவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு பசுமைவழிச்சாலை சேலம் – சென்னை என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் 2 நிமிட டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குனர் சந்தோஷ் கோபால் கூறுகையில்; பசுமை வழிச்சாலை திறைப்படம் பல உண்மை சம்பவங்களையும், உண்மையான அந்த மக்களின் பதிவுகளையும், அந்த இடங்களில் பதிவுகளோடும் பதேர்பாஞ்சாலி (சத்தியஜித்ரே) போன்ற மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடாகவும், வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் மாற்றங்களால் உருவாகும் பயத்தையும், அந்த சூழலில் மக்களின் உணர்வுப் பதிவுகளையும் கொண்ட படமாக இப்படம் இருக்கும் என்றார்.

படத்தின் சூட்டிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் நடிகர், நடிகைகள் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழிற்நுட்ப கலைஞர்களின் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும். சேலம் – சென்னை பசுமை வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் அத்திட்டத்தை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news