பிரேமம் மலரின் அடுத்த காதல் – சாய் பல்லவியின் இரட்டை மகிழ்ச்சி

பிரேமம் படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சாய் பல்லவி. தமிழில் லக்‌ஷ்மி படத்திற்கு பிறகு மாரி-2 வில் ரவுடி பேபியாக கலக்க இருக்கிறார். அவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் தனக்கான முத்திரையை பதித்துள்ளார்.

தெலுங்கில் காதல் படமான பிடா பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. இப்பொழுது சர்வானந்துடன் “படி படி லேச்சே மனசு” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை உண்டு பண்ணியுள்ளது. இதுவும் ஒரு காதல் சம்மந்தப்பட்ட திரைப்படம்தான்.

பிரேமம், பிடாவிற்கு பிறகு இவரது படி படி லேச்சே மனசு ரசிகர்களின் மனதில் காதலை உண்டு பண்ணுமா என்பதை டிசம்பர் 21 அன்று நாம் பார்க்கலாம். மாரி-2 ரிலீஸாகும் தேதியில் இந்த படமும் ரிலீஸ் ஆவது சாய் பல்லவிக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்க உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news