அழியும் தருவாயில் இருக்கும் ஒரு நாள் போட்டிகள். எச்சரிக்கைவிடும் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என எண்ணற்ற பெயர்களில் அழைக்கப்படுபவர் தான் இவர். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும். எண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 2 பந்துகளை பயன்படுத்துவது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதனால், பந்துவீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற யுக்தியை பயன்படுத்த முடியாமல் திணறி வருவதற்கு காரணம் என சச்சின் டெண்டுலகர் கூறியுள்ளார். மேலும் இது கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல என்றும் சச்சின் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்ததை சுட்டிக்காட்டியே சச்சின் டெண்டுல்கர் இவ்வாறு பேசியது கூறிப்பிடத்தக்கது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news