September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

24 வருடங்களுக்கு பின்னர் சுவீடன் அணிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. விவரம் உள்ளே

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று அரங்கேறிய 2–வது சுற்று ஆட்டத்தில் சுவீடன்–சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதல் ஆக்ரோ‌ஷமான பாணியை கடைபிடித்த இரு அணிகளும் மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டபடி இருந்தன.

இருப்பினும் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை. பிற்பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினர். ஸ்விடன் வீரர் டோய்வோனென் தட்டிக்கொடுத்த பந்தை சுவீடனின் எமில் போர்ஸ்பெர்க் இலக்கை நோக்கி ஓங்கி உதைத்தார். அப்போது குறுக்கே நின்ற சுவிட்சர்லாந்து வீரர் மானுல் அகன்ஜி காலால் வேறு பக்கம் தள்ள முயன்றார்.

ஆனால் பந்து அவரது காலில் பட்டு வலைக்குள் நுழைந்தது. மானுல் அகன்ஜி குறுக்கிடாமல் இருந்திருந்தால், சுவிட்சர்லாந்து கோல் கீப்பரே தடுத்து இருப்பார். ஏனெனில் அதற்கு ஏற்ப அவர் சரியாக நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் முன்னிலை பெற்றது. ஸ்விசர்லாந்து அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கோலாக்க தவறிவிட்டது.

முடிவில் சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 1994–ம் ஆண்டுக்கு பிறகு சுவீடன் அணி முதல் முறையாக கால்இறுதியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாக்கவுட் நிறைவு பெற்றதால் இன்றும் நாளையும் கால்பந்து போட்டிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news