ஐந்து மொழிகளில் ‘ஆர்ஆர்ஆர்’ மோஷன் போஸ்டர் வெளியீடு

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர்.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் இப்படத்தின் மோஷன் போஸ்டர், தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு இன்று(மார்ச் 25) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மோஷன் போஸ்டரை ஐந்து வெவ்வேறு யு-டியூப் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ் மொழி மோஷன் போஸ்டரை ஜுனியர் என்டிஆர் யு-டியூப் கணக்கில் வெளியிட்டுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனத்தின் தளத்தில் தெலுங்கும், அஜய் தேவகன் தளத்தில் ஹிந்தியும், ராம்சரண் கணக்கில் மலையாளமும், வாராகி சல சித்ரம் கணக்கில் கன்னட மோஷன் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

மோஷன் போஸ்டரில் படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரண் உடல் முழுக்க நெருப்பு பற்றி எரிவது போன்றும், மற்றொரு நாயகனான ஜுனியர் என்டிஆர், உடல் முழுக்க நீரால் சூழப்பட்டது போன்றும், இருவரும் ஒன்றாக இணைவது மாதிரியாக இந்த மோஷன் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பக்கம் நெருப்பும்,

ஒவ்வொரு மொழியிலும் ‘ஆர்ஆர்ஆர்’ என்பதற்காக தனித் தனி விரிவாக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழில் ‘ஆர்ஆர்ஆர்’ என்பதற்கு ‘ரத்தம், ரணம், ரௌத்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news